Thursday, October 13, 2011

தி ஆல்கெமிஸ்ட்



இந்த வாரம் Paulo Coelho (பாலோ கோலோ) எழுதிய “தி ஆல்கெமிஸ்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு  நேர்ந்தது.

ஒரு ஆடு மேய்க்கும் நாடோடிப் பையனை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கும் நாவல்.  இப் புத்தகம், வாசித்து முடிக்கும் பொழுதுதான் இது ஆன்மீகப் புத்தக வகையைச் சார்ந்தது என உணரமுடியும்.

இவர், மதத்தினையும் ஆன்மீகத்தினையும் பிரித்துப் பார்க்கச் சொல் கிறார்.   நல்ல அணுகுமுறை.


அடிப்படியயில் கதாசிரியர் ஒரு கத்தோலிக்க கிறித்துவர். கதையில்  இஸ்லாம் மதத்தினை தொட்டுச் செல்கிறார்.

இவர் சொல்லும் கருத்து ‘நமது வேதங்களும், உபநிடதங்களும் மிக விளக்கமாக, அழுத்தமாகச் சொல்லும் ‘அத்வைதத்தினை’ முன் வைக்கிறது.
மிக எளிமையான ஆங்கிலம். எடுத்தால் வைக்கமுடியாத வகையில், துடிப்புடன் கதையை நகர்த்திச் செல்கிறார். 

இவர் அடிக்கடி இக்கதையில் பயன்படுத்தும் ‘சகுனம்’, ஆன்மா,மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கை, உலகின் ஆன்மா போன்ற பல்வேறு வார்த்தைகள், நமது இந்துமதம் விஸ்த்தாரமாகப் பேசும் ‘மாயை’, ஜீவன், பரமாத்மா, ஜகம் ஆகியவற்றில் அடங்குகிறது. சுவாரஸ்யமான புத்தகம்.
படித்துப் பாருங்கள் என சிபாரிசு செய்கிறேன். விலை ரூபாய். 200/-
(இப்புத்தகம் இளவயதினருக்கு பரிசளிக்க உகந்தது. ஆன்மிகத்தைத் தவிர்த்து, விடாமுயற்சி, லட்சியத்தினை விடாப்பிடியாக துரத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக)

No comments:

Post a Comment