Tuesday, June 24, 2014

என்னில் என்ன பார்க்கிறாய்?

ஒரு பெண்ணிற்கு திருமணம்!
என்னில் எதைப் பார்க்கிறாய் என்றது திருமணம்.

சுகத்தை, மரியாதையை, சௌகர்யத்தை என்றான் – அவன்
பாதுகாப்பை என்றாள் – அவள்
ஒத்தாசைக்கு ஒருத்தி என்றாள் - மாமியார்!
கடமை முடிந்தது, இனி கடன் அடைக்கனும் என்றார் - அப்பா!
என்போலன்றி நீயாவது சுகமாயிரு என்றாள் - அம்மா!
கார் விற்பதற்கு தோதான  நேரம் என்றார் – கார் டீலர்!
ஒரு ஃப்ளாட்டிற்கு ஆள் தேத்தியாச்சு என்றார் – ரியல் எஸ்டேட்காரன்.
“தண்ணி பார்ட்டி எப்ப என்றனர் - அவன் நன்பர்கள்!
ஆஹா.. புன்ன(ந)கைத்தார் - ஜூவல்லர்!
ஆடித்தள்ளுபடி என்றார் - ஜவுளியார்!
LCD யா LED யா என்றார் – வஸந்த் அண்ட் கோ!
No Transfer – சீறினார் பெண் வேலைபார்க்கும் HR!
சுவற்றை காலி செய்தனர் – PIN UP பெண்கள்!
அட்மிஷனுக்கு இப்போதே அப்ளிகேஷன் வாங்கு என்றனர் – பள்ளியில்!

பத்து வருடம் கழித்து, திருமணம் அதே கேள்வியைக் கேட்டபோது,
குர்குரேயையும் –கிரிக்கட் பந்தையும்
தேடிக் கொண்டிருந்தனர் – குழந்தைகள்.


போ அப்பாலே.... பேச நேரமில்லை என்றான் அவன்!
சலிச்சிடுச்சி- இது குக்கரில் எத்தனையாவது விசில் என்றாள் அவள்!

இருபது வருடம் கழித்து அதே கேள்வி!


பசங்களின் Boy friend / Girl friend  கவலையே  பெரிசாயிருக்கு!
நடுவே  நீ வேறேயா...?
ஹோமிற்கு போய் அம்மா அப்பாவைப் பார்க்கனும்
பிறகு வா என்றனர் இருவரும்!

முப்பது வருடம் கழித்து...
அதே கேள்வியைக் கேட்க வந்தது திருமணம்!

வீட்டில் பேரமைதி!
தனிமையில் இருவரும்!
அவள் நல்லா இருந்தால் போதும் என்றான் அவன்!
அவர் நல்லா இருந்தாலே போதும் என்றாள் அவள்!!

கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வந்தது திருமணம்
அதே கேள்வியுடன்!

அப்படியெல்லாம் இந்த வீட்டில் எவரும் இல்லை!
போய்வா என்றனர் யாரோ!!


No comments:

Post a Comment