Wednesday, October 22, 2014

என்னைக் காணவில்லை !


இன்று அவள் வந்திருந்தாள்!
பச்சை வண்ண புடவையில்-கருப்பு கோடுகள்.
அதே கோணல்வாய்ச் சிரிப்பு!
உண்ணைப் பார்த்துப் போக என்றாள்.
இரவு நேரம்,
ஆற்றில் குளிர் அதிகம்,
சுழலும் ஓட்டமும் அதிகம்!
கரைசேரவொண்ணாதபடி கரையெங்கும்நாணல்கள்,
புலன்களில் தெம்பில்லை என்றேன்.
புகார் சொல்லாதே – பதிலுரைத்தாள்.
ஆற்று நீரில் குனிந்து பார் எனச் சொல்ல,
என் முகமும் நீரில் தெரியவில்லை,
உடன் எவருமில்லை, நானும் கூட, என்றேன்!
அவை அப்படித்தான், ĵ
நீந்த மட்டுமே உரிமை உனக்கு என்றாள்!
ஆறு எங்கு முடியும்? அருவியிலா-கடலிலா?
அதுதான் பிரம்ம முடிச்சு! சிரிக்கிறாள்!
உடன் வந்த பூத கனங்களும்- சிரிக்கின்றன!
நிம்மதியும் தெம்பும் வந்தது!

No comments:

Post a Comment