Monday, May 25, 2015

சின்ன மீன் முட்டி அருவி - நீலிமலை வ்யூபாயிண்ட்

         வயநாடு மாவட்டத்தில் உள்ள,  ஒரு பார்க்க வேண்டிய மற்றும் ஒரு இடம் சின்ன மீன் முட்டி அருவி. 

       இந்த சுற்றுலாத் தலத்தில், ஒவ்வொரு அருவியும், அதற்குண்டான பிரத்யேகமான அழகுடன் திகழ்கிறது. அருவியை பார்ப்பதற்கு இங்கும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் டிரெக்கிங் செய்தாக வேண்டும். மெயின் அருவின் கிட்டே போக முடியாது. தூரத்து தரிசனம் தான். எப்பொழுதும் போல வழியெங்கும் சோலைகள். அருவி கீழே விழுந்து ஓடும் இடத்தில் டூரிஸ்ட்கள் குளிக்கின்றனர். சில படங்களைப் பாருங்களேன்.

எப்பொழுதும் போல செல்லும்வழி எவ்வளவு அடர்ந்த காடாக, குளுமையாக இருக்கிறது பாருங்கள் 

செல்லும்வழி 





உயரே தெரிவதுதான் சின்ன மீன்முட்டி அருவி 







----------------------------------------------------------------------------------------------------------------------------------------



நீலிமலை வ்யூபாயிண்ட் என்று ஒரு இடம். இதுவும் வயவநாடு தான். நீலிமலை அடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர், மேலே  டிரெக்கிங் போனால் இந்த இடத்தைக் காணலாம் . பாதி தூரத்திற்கு ஜீப் செல்கிறது. பிறது நடராஜா. மிக வழுக்கலான பாதை. வயநாடு முழுவதுமே டிரெக்கிங் ஸ்பாட் தான். தட்டுத்தடுமாறி மேலே சென்று விட்டால் கிடைக்கும் காட்சி இருக்கிறதே! அடாடா... அற்புதம் .. பிரமாதம் என்ற வார்த்தைகள் எல்லாம் ஓரமாக ஒருதுங்கிக் கொள்ளவேண்டும்.  படங்களைப் பாருங்கள்:



 1400 அடி உயரத்திலிருந்து  விழுகிறதாம் இந்த அருவி. 



 விழுந்த அருவி  சிறிய ஆறாக ஓடுகிறது 



இதைவிட அழகு வேண்டுமா?


No comments:

Post a Comment