Tuesday, May 5, 2015

திருவதிகை


கடலூரை அடுத்த திருவதிகை என்ற இடத்தில் இருக்கும் பழமையான, மிகப் பிரம்மாண்டமான கோயில் வீரட்டேஸ்வரர் கோயில். இறைவி பெயர் திரிபுர சுந்தரி.  எட்டு வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரம் எரித்த இடம்.

16 பட்டைகளுடன்  கூடிய, மிகப் பெரிய மூலவர் (சிவலிங்கம்).  பெரிய குளம். மிக விஸ்தாரமான கோயில்.  ராஜகோபுரதிலும், அதனருகே உள்ள மண்டபத்திலும் ஏராளமான நயமிக்க சிற்பங்கள்.

கோயிலின் கோபுர அமைப்பே மிக வித்தியாசமானது. கோபுரத்தின் அடிப்பகுதியிலிருந்தே, சிற்பங்கள். கர்ப்பக்கிருஹ கோபுரம் பார்ப்பதற்கு மிக அழகாக, ஒரு தேர் போல இருக்கும். சரக்கொன்றை தலவிருட்சம். திருஞான சம்பந்தருக்கு  நடனம் காட்டிய இடம்.
அப்பரின் சகோதரி திலகவதி கோயில் தொண்டு செய்த இடம். திலவதிக்கும் சன்னதி உள்ளது.

ஈசன், நோய் தீர்த்து, ‘மருள்நீக்கி’ என்ற இயற்பெயர் கொண்ட அப்பரை சைவத்திற்கு மாற்றிய இடம். 

இத்தலத்தை மிதிக்க அஞ்சி, தன் கால் அங்கு படக்கூடாது என்பதற்காக ‘சுந்தரர்’ இங்கே நுழைய வில்லையாம்.

கோயிலின் அருகே, கெடிலம்   நதிக் கரையில் சுப்ரமனியத் தம்பிரானுக்கும்-சிவஞானத்தம்பிரானுக்கும் கோயில் இருக்கிறது. இவ்விருவரும் இக்கோயிலுக்கு வாழ் நாள் முழுவதும் கைங்கர்யம் செய்தவர்கள். பார்க்க வேண்டிய கோயில்.


அருகே, திரிபுரம் எரித்த பொழுது, வில்லெடுத்துக் கொடுத்த ‘சர நாராயணப் பெருமாள்’ கோயில் உள்ளது. அலங்காரப்பிரியர் ஆயிற்றே, அழகைத் தனியாக சொல்ல வேண்டுமா?

ராஜ கோபுரம் 

நுழை வாயிலில் இருக்கும் புத்தர் 



வித்தியாசமான சிவா லிங்கம் 

கர்ப்பக்ரஹா கோபுரம் 

சார நாராயணப் பெருமாள் (இது தனிக் கோயில்)


வீரட்டேஸ்வரர் கோயில் உட் கோபுரம் 
வீரடேஸ்வரர் கோயில் குளம்.

No comments:

Post a Comment