Wednesday, May 6, 2015

கிருபாபுரீஸ்வரர்..


திருவெண்ணை நல்லூர், கிருபாபுரீஸ்வரர் கோயில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவி: மங்களாம்பிகை. ஸ்தல மரம்: புன்னை.

சுந்தரர், கல்யாணத்திற்கு தயாராக இருக்கும் போது, எழுபதுகளில் வந்த திரைப்படம் போல, ஒரு ஆள் திடீரென தோன்றி, ‘நிறுத்து திருமணத்தை’ என்கிறார். யாரப்பா நீ, இப்படி தாலி கட்டும் நேரத்தில் வந்து தடைவிதிக்கிறாய் என பஞ்சாயத்து வைக்கிறார்கள். சுந்தரர் தனக்கு அடிமை என்பதற்கு  ஆதாரமாய் சில சுவடிகளைக் காண்பிக்க, கடைசியில், வந்தது ஈஸ்வரனே என்பது புலனாகிறது.

வந்த நபரின், அதாவது சிவபெருமானின் காலணியை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கருவறையின் அருகிலேயே இன்னமும் அந்தக் ‘குறடுகள்’ கண்ணாடிப் பேழையில் வைத்திருக்கிறார்கள்.

சுந்தரரின்
‘பித்தா பிறைசூடி பெருமானே, அருளாளா
எத்தான் மறவாதே நினைகின்றேண் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத்தென்பால் வெண்ணைய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா, உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே’

என்ற புகழ்பெற்ற பாடல் இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு இங்கு தான் பாடப் பெற்றது.

சில முனிவர்கள் அகந்தையுடன் தவம் செய்ய, அவர்களை சீர்படுத்தினார் ஈசன். அவர்கள் இங்கே செய்த பாவம் நீங்க தவம் செய்ததை ஏற்று சிவன், அருள்புரிந்ததால் திருஅருட்டுறை என்றும் இந்த ஊர் வழங்கப் படுகிறதாம்.


கோவில் மிக அழகாக இருக்கிறது. படங்களைப் பாருங்களேன்.






இதுதான் பஞ்சாயத்து நடந்த இடம்

 வாதாடீஸ்வரர் மண்டபம்... என்ன ஒரு அழகு பாருங்கள்
கோயிலின் உட்புறம்

ஸ்ரீ கிருபாபுரீஸ்வரரையும் - அருகே பாது காக்கப்படும் (கண்ணாடிப் பேழையுனுள்) குறடுகளையும் பாருங்கள்.

நடராஜாப் பெருமான்

ஸ்ரீ வினாயகர்


உள் மண்டபம்

ஹி..ஹி..ஹி

மங்களாம்பிகை

 இவர்தான் வாதாடீஸ்வரர்.. முன்னே இருக்கும் பிராது பெட்டியைப் பாருங்கள்

No comments:

Post a Comment