Tuesday, January 26, 2016

திருவெள்ளறை

இன்று திருச்சி அருகே உள்ள ‘திருவெள்ளறை ’ என்னும் ஊரில் உள்ள புண்டரீகாட்ச பெருமாளை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. 

கோயிலின் அருகே இறங்கி, தலையுயர்த்தி பார்த்த கணமே, மனம் பரவசக்கடலில் மூழ்கியது. எதிர்பார்த்தது,  மற்றும் ஒரு தென்னக வைஷ்னவ கோயிலை; ஆனால் காணக்கிடைத்தது “பிரமிப்பு, ஆச்சர்யம், கம்பீரம், தொன்மை” ஆகிய அனைத்தும் ஒருங்கினைந்த ஓர் ஆச்சர்யக் கோயிலை. 

ஐம்பதடி உயரமுள்ள ஒரு கரட்டின் மீது அமையப்பெற்றது இக்கோயில். (திரு+வெள்ளை+பாறை என்பது மருவி திருவெள்ளாறை என்றானதாம்). திவ்யதேச ஸ்தலங்களில் ஒன்று. பெரியாழ்வார், திருமங்கையாழ்வரால் மங்களாசாஸனம் செய்யப் பெற்றது. 14 ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்திருக்கிறது கோயில். கோயிலைச் சுற்றி 36 அடி உயரத்திற்கு பிரமாண்டமான சுற்றுச் சுவர். கோட்டைபோல காட்சி தருகிறது.

நுழைவு வாயில் (ராஜ கோபுரம்) முடிக்கப்படாத நிலையில் உள்ளது. அந்த நிலையிலேயே என்ன ஒரு பேரழகு.  காண இரு கண் போதாது.வெளி நாடாக இருந்தால், இத்தனை அழகுடன், பழமையுடன், எழிலுடன், கம்பீரமாய் இருக்கும் இந்த முடிக்கப்படாத கோபுரத்திற்கு கிடைக்கக் கூடிய மரியாதையே தனியாய் இருக்கும்.

மூலவர் சன்னிதியில் பூமிப்பிராட்டி, பெரிய பிராட்டி, சூர்ய-சந்திரர்கள்,ஆதிசேஷன். நின்ற நிலை கோலம். 

 இக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோயிலிற்கும் முந்தியதாம். ராமர் காலத்தை ஒட்டியது என்கிறார்கள்.(ஸ்ரீ ராமருக்கு நான்கு தலைமுறைகள் பின்னால் - சிபி சக்ரவர்த்தி காலம்)  

இங்கே, விஷ்வேக்ஷனர், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், நாதமுனிகள், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், ஆண்டாள், ராமானுஜர், மனவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சன்னதிகள் இருக்கின்றன. பெருமாள்மீது தாயாருக்கு இங்கு உரிமை அதிகமாம் (திவ்ய தேசங்களில் இதுபோல, நாச்சியார் கோவிலும், ஸ்ரீவில்லிப்புத்தூரும் வரும்). உய்யக்கொண்டான் பிறந்த ஸ்தலம்.

மூலவரை தரிசிக்கச்  செல்ல தக்க்ஷணாயன காலத்திற்கு ஒன்றும், உத்ராயண காலத்திற்கு ஒன்றாகவும்  இரு நுழைவுகள்.

ஸ்வஸ்திக் வடிவக்குளம் ஒரு விஷுவல் டிலைட்.

கோவில் பின்னால், வஸந்த மண்டபமும், குகைக்கோயிலும் உள்ளன. குகைகள் பல்லவர் காலத்தியது.

கோயிலைப்பற்றிய புராணங்கள் எண்ணற்றவை.கோயிலின் சிற்பக்கலைக்காகவும், கம்பீரத்திற்காகவும், தொன்மைக் காகவும், அழகுக்காகவும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய கோயில்.  

சில புகைப் படங்களைப்  பாருங்கள்.














4 comments:

  1. அய்யா மிக்க மகிழ்ச்சி! அழகிய படங்களுடன் பகிர்ந்தீர்கள். திருத்தலத்தின் பெயர் திருவெள்ளறை. பதிவினில் திருவெள்ளாறை > திருவெள்ளறை என்று மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. மாற்றிவிடுகிறேன். திரு+வெள்ளை+பாறை என்பதற்கு திருவெள்ளாறை பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். அன்புடன். பலராமன்.

      Delete
  2. அழகிய அனுபவம். அழகுக்கும், பிரமாண்டத்துக்கும் தமிழகத்தில் பஞ்சமேது. (அது என்ன வெளிநாடு?)
    நம் நடராஜப்பெருமான் சிற்ப சிறப்பை வியக்காத மக்களும் நாடும் ஏது?
    சிறப்பும், அழகும் நிறைந்த தஞ்சை, தாராசுரம்.......... (ஓரு லட்சம் எனக்கொள்க) என நம் தெய்வீக சிறப்பு ஏராளம் சார்.
    பயணம் தொடரட்டும்.
    மகிழ்வும் தொடரட்டும்..
    வாழ்க.

    அன்புடன்,
    அரசு.

    ReplyDelete
  3. Good presentation. There is a hole in chakrathalwar sannithi through which srirangam rajagopuram can be seen.

    ReplyDelete