Wednesday, October 5, 2011

டபுள் கிராஸ்


"உங்களை எம்.டி கூப்பிடிகிறார் சார்!"  அழைத்தான் பியூன்.


"இதோ வரேன்.." கிளம்பினார் நடேசன்.  நடேசன் தன் ரூமைச் சாத்திவிட்டு,  லிஃப்ட் ஏறி,  இரண்டாவது மாடிக்குச் சென்று, எம்.டி -ஐ பார்ப் 
பதற்குள், சிறு குறிப்பாக, இவரைப்பற்றி சொல்லுவதற்கு, சமயம் இருக்கி 
றது. 


எம்.டி எனப்படுவது திரு. ராமாமிர்தம் அவர்களை குறிக்கும்.  நாலு வருடமாக இந்த "Win and Win" கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார். பொறுப்பேற்கும் பொழுது கம்பெனி "ரெட் லைனில்" இருந்தது.  'ரெட்ரெச்மெண்ட்' , 'லேஆஃப் ' எல்லாம் நடை பெற்றது.  இந்த நாலு வருடத்தில் நிலைமையை தலை கீழாக்கிவிட்டார்.  இந்த வருடம், வரிக்கு பிந்திய லாபமே கோடிகளில்.  சென்னை கேளம் பாக்கம்-சிருசேரியில் பெரிய அசெம்பளிங் யூனிட் இருக்கிறது.  இரண்டு ஷிப்ட்களில் ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.  வருஷத்திற்கு பத்து லட்சம் கம்யூட்டர்கள், லேப்டாப்கள் தயாரிக் கிறார்கள்.   பாதிக்கு மேல் ஏற்றுமதியாகும்.  இந்தியாவில் லேபர் சீப் அல்லவா? என்வே எக்ஸ் போர்ட் ஆர்டர் எப்போதும் கைவசம் இருக்கும். கம்ப்யூட்டர் உற்பத்தியில், 
இந்தியாவில் நெம்பர் டூ கம்பெனி இவர்களது.


ராமாமிர்தம் கூப்பிட்டனுப்பிய 'நடேசன்' என்பவர், இந்த "Win and Win" கம்பெனியின் நிர்வாக அதிகாரி.  நடேசன், பத்து வருடம் இங்கு நிர்வாகம் பார்த்ததினால், யார், எதற்கு எப்போது கூப்பிடுவார்கள் என்பது ஓரளவு அத்துப்படி. எதற்கும் இருக்கட்டும் என்று, போன வார சேல்ஸ் ரிப்போர்ட், ஸ்டாஃப் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார். 


கொஞ்சம் இருங்கள்!  நடேசன் எம்.டி-யின் ரூமிற்குள் வந்துவிட்டார்.


லேசாக கதவைத்தட்டிவிட்டு எம்.டி யின் அறைக்குள் நுழைந்தார் நடேசன். 
அங்கு ஏற்கனவே ப்ரொடக்ஷன், அக்கவுண்ட்ஸ் யூனிட் இன்சார்ஜ்கள் 
அமர்ந்திருந்தனர்.


"கமின் மிஸ்டர் நடேசன்.  ஹாவ் யு சீன் த டெண்டர்ஸ் டுடே?" என்றார் எம்.டி.


"யெஸ் சார்.. ஸ்டேட் கவர்ன்மெண்ட் ஹேஸ் ஃப்லோடட் எ டெண்டர் ஃபார் டூ லாக்ஸ் கம்ப்யூட்டர்ஸ்"


"தட்ஸ்! .. வீ மஸ்ட் டேக் தட் ஆர்டர்..அட் எனி காஸ்ட்..."


"ரெண்டு லட்சம் கம்ப்யூட்டர் வாங்கி என்னப்பா செய்யப்போறாங்க...?" 


"ரூலிங் பார்ட்டி எலெக்ஷன் மேனிஃபெஸ்டோவில் கமிட் பண்ணியிருக்காங்க சார். எல்லா இஞ்சினியரிங் ஸ்டூடென்ட்ஸ்க்கும் கொடுக்கப் போறாங்க..."


'யெஸ்.. யெஸ்.   ஐ ரிமெம்பர் தட்..."


'என்ன.. புரடக்க்ஷன்...,  இன் கேஸ், இஃப் வி வின் த டெண்டர்.. கேன் யூ கோப் அப் த சுட்சுவேஷன்?


"நோ பிராம்ளம் சார்.. வி.. கேன்! வி மே அரேன்ஜ் ஃபார் தேர்ட் ஷிப்ட் ஆல்ஸோ."  


மீட்டிங்க முடிவில், அன்று மாலைக்குள் கவர்ண்மெண்ட் போட்டிருக்கும் இரண்டு லட்சம் கம்யூட்டர் டெண்டருக்கு,  கோட் செய்யப்போகும் விலை, அரசியல்,அதிகார வர்க்கத்தினருக்கு செய்ய வேண்டிய 'மாமூலினையும்' சேர்த்து, என்னவாக இருந்தால் கட்டுப்படி யாகும் என தெரிவிக்க வேண்டும் என அக்கவுண்ட்ஸுக்கும், டெண்டர் ஃபார்மாலிட்டிஸை கவணிக்கும் படி நடேசனுக்கும் உத்தரவிடப்பட்டது. 


எம்.டி போன பின் இந்த டெண்டரை எடுக்கும் விதம் பற்றி மற்றவர்கள் தனியாக மீட்டிங் போட்டனர்.  நீண்ட ஆலோசனைக்குப்பின் ஒரு கம்ப்யூட் டர் ரூ.29,200  என கோட் செய்வது என தீர்மாணமாயிற்று. டெண்டர் ஃபார்ம் களை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்யும் வேலைகளில் இறங்கினார் நடேசன்.  


அடுத்த நாள் மாலை மூன்று மணியிருக்கும்.  நடேசனது செல் கூப்பிட்டது.  


"சார்..குட் ஆஃப்டர் நூன்.. ஐ யாம் ப்ரியதர்ஷினி... சுருக்கமா ப்ரியா"


நடேசன் தனது நினைவறைகளில் தேடிப்பார்த்தார்.  ப்ரியா அகப்பட வில்லை.


"சாரி.. ஐ காண்ட் ரிமெம்பர்.. விச் ப்ரியா யு ஆர்?'


"நான் உங்களை நேரில் சந்திக்கலாமா?"


"ஏன்? என்ன விஷயமா?"


"அதை, ஃபோனில் சொல்வது கடினம்.. இன்று இரவு.. ஏழு மணிக்கு ஷெரட்டானுக்கு வரமுடியுமா?"


"இதோ பாருங்கள்.. நீங்கள் யாரென்றே தெரியவில்லை..எதற்காக உங்களை சந்திக்க வேண்டும்?.. எது சம்பந்தமாக நீங்கள் சந்திக்க விரும்புகிறீகள் என சொன்னால்தானே நான் தீர்மாணிக்க முடியும்?"


"சார்.. நான் ஒரு பெண். உங்களை கடித்து விழுங்கிவிட மாட்டேன்.  ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஸ்பேர் பண்ணக் கூடாதா? விபரம் நேரில் சொல்கிறேன். இரவு ஏழு மணி ஷெரட்டான். ப்ளீஸ்" 


"ஸ்டில் ஐ அம் நாட் கன்வின்ஸ்ட். வொய் ஷுட் ஐ மீட் யூ?"


"ஒரு அழகான இளம் பெண்ணை சந்திக்க விரும்பவில்லையா? என்னிடம் நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்"


யாரிவள்? என்ன வேண்டும் அவளுக்கு? அவள் குரலில் கண்ட வசீகரம், கொஞ்சலான- செக்ஸியான குரல், அவளை போய்ப் பார்த்தால்தான் என்ன இழுத்தது. மேலும் "ஸ்காட்ஸ்" சாப்பிட்டு வேறு ரொம்ப நாளாயிற்று.  


'ஓ.கே. வீ ஷெல் மீட் பை செவென்..


"தேங்க் யூ சார்"

மாலை 6.15.  தனது அன்றைய பணிகளை நிறைவு செய்துவிட்டு, ஆபீஸ் பாயை விளித்து, ரூமை பூட்டச் சொல்லிவிட்டு லிஃப்டில் இறங்கினார் நடேசன். சட்டென நினவுக்கு வந்தாள் ப்ரியா. அந்த முகம் தெரியாத ப்ரியாவை சந்திக்கப் போகும்  உற்சாகத்துடன் காரை ஷெரட்டன் நோக்கி திருப்பினார்.


லவுன்சில் கண்களை மேயவிட்டபோது, 'ஹலோ சார்... குட் ஈவினிங்க் 
கிளாட் டு மீட் யூ...'


கை நீட்டிய பெண்ணைப்பார்த்தார்.  பளீரென்ற சிவந்த மேனி, மெல்லிய ஷிபான் புடவை.  கழுத்தில் ஒரு செயின்.  அளவான உடலமைப்பு.. குறை சொல்ல முடியாத முகம். தோள் வரை கட் செய்யப்பட்டு அலையும் கூந்தல்.  கைகுலுக்கலில் 'ஜில்'லென இருந்தாள்.  தோற்றத்தை வைத்து அதிக பட்சமாக 29 வயது சொல்லலாம்.


கார்னர் டேபிள் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. 


" ஓ.கே ப்ரியா.. ஹு ஆர் யூ? வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?


சுவாதீனமாக, அவரருகில் அமர்ந்தாள்.  கிறங்கடிக்கும் பர்ஃப்யூம்..அருகில் 
வரும்போது அவளது கூந்தல் அவரது முகத்தை வருடியது. 


முதலில் 'ஸ்காட்ச்,  பின் இண்டொரொடக்ஷன்...'  ஸ்காட்ச் ஆர்டர் செய் தாள் ப்ரியா.


'நான் கே.டி.ஸ் கம்யூட்டர்ஸின் பி.ஆர்.ஓ.'  


நடேசனது பிஸினஸ் மூளைக்கு சட்டென்று எல்லாம் பிடிபட்டது.  


"ஸோ... நீங்கள் கம்யூட்டர் டென்டரில் எங்களுடன் போட்டியிடுகிறீகள்.  அதற்கு நான் உதவ வேண்டும்.. அப்படித்தானே?"


"தட்ஸ் ரைட்.. நீங்கள் மிகவும் கெட்டிக்காரர்.  விவரமாக உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.   நீங்கள் அந்த டெண்டருக்கு எவ்வளவு 'கொட்டேஷன்' கொடுக்கப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் கேட் பதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.."


'கெட் லாஸ்ட் ப்ரியா... ஐ டோண்ட் வாண் டு டாக் டு யு எனி மோர்..' எழுந்தார் நடேசன்.  சட்டென்று அவரது தோளைப்பிடித்து அழுத்தி உட்கார வைத்தாள்.  அவரது அருகில் நின்று கொண்டாள்.  'லுக்.. நடேசன்... ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள்?'  இந்த டெண்டரில் யார் தோற்றாலும், வென்றாலும் நம் கம்பெனிகளுக்கு பெரிய நஷ்டமில்லை.  அது நமக்கு எந்தவிதத்திலும் பயனளிக்கப் போவதில்லை. நமது முதலாளிகளின் லாபம் குறையப் போவதுமில்லை.   இதெல்லாம் கம்பெனிகளில் சகஜம்.  "


ஸ்காட்ச் கலப்பதில் நிபுனியாக இருந்தாள் ப்ரியா.  அவருக்கு பிடித்த மாதிரி, ஸ்காட்ச் -ஐ, 7-அப் புடன் கலந்து கொடுத்தாள்.  அவரைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருப்பாள் போலும். அவள் வினோதமா லைம் 
ஜூஸுடன் கலந்து ஸ்காட்ச் எடுத்துக் கொண்டாள்.


"இது என்னால் முடியாது.. துரோகம் ப்ரியா.. நான் போகிறேன்."  


"இந்த விஷயத்தை நீண்ட நேரம் பேச விரும்ப வில்லை நடேசன். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்.  நீங்கள் தரும் தகவலுக்காக இருபது வரை தருகிறோம்.  இந்த ஆஃபரை மறுக்காதீர்கள்.   நான் உங்களை வற் புறுத்தப் போவதில்லை.  பதிலை உடனே சொல்ல வேண்டியதில்லை.. யோசித்து நாளை மாலைக்குள் சொல்லுங்கள்..'


"இருபது?"


"யெஸ்... ட்வெண்டி லாக்ஸ்"


"நோ..வே ப்ரியா..ஐ டொண்ட் லைக் திஸ் ஐடியா.."


"பாசாங்கு செய்யாதீர்கள். இருபது என்பது உங்களுக்கு சாமானியமான தொகை அல்ல என்பது எனக்குத் தெரியும் நடேசன்.  நீங்கள் டிரீம் ஃப்ளாட் ஒன்றை மனதில் வைத்திருக்கிறீகள்.  அதற்கு இது பயன்படும்.  மறுப்பதால் உங்களுக்கு பயன் ஏதுமில்லை. யோசித்துப் பாருங்கள்."


"இல்லை..ப்ரியா.. மனதுக்கு சரியெனப் படவில்லை.  " கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தார் நடேசன்.


"ரொம்ப வெட்கப் படுகிறீர்கள் மிஸ்டர் நடேசன்,  'உங்களுக்கு என்னதான் 
வேண்டும் இன்று இரவு என் ஃப்ளாட்டுக்கு வாருங்கள். கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாம்.. நான் தனியாகத்தான் இருக்கிறேன்"  அவரை காமத்துடன் உரசினாள்.


அதுவரை அவர் அடக்கி வைத்திருந்த யாவும் கட்டறுந்தது.  ப்ரியாவின் 
அருகாமை, அவளின் ஸ்பரிஸம், அவள் தரும் போதை யாவும் கண நேரத் 
தில் அவரை சலனப்பட வைத்துவிட்டது.


"யு மீன்?" 


"யெஸ், ஐ மீன் தட்.  யு கேன் டேக் மீ.. இட்ஸ் அ டீல்.."


அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவர் ப்ரியாவின் ஃப்ளாட்டில் இருந் தார்.


உள்ளே சென்றிருந்த 'ஸ்காட்ச்' அவரிடம் எஞ்சியிருந்த "அனிமல் இன்ஸ் 
டிங்க்டை" தூண்டிவிட, ஃப்ரியாவை ஆரயத்துவங்கினார்.  


"நாட் நௌ நடெசன், டெல் மி த டெண்டர் ஃபிகர் அண்ட் தென் யூ கேன் டேக் மி..."


"உனக்கு அந்த தொகையை சொல்லத்தயார் ப்ரியா.. ஆனால் ஐ வாண்ட் டு பார்கெய்ன் வித் யூ ப்ரியா.."


"பார்கெய்ன்.? ஓ..கே.. உங்களுக்கு எவ்வளவு வேண்டும்.."


"இருபத்திரெண்டு.."


"ட்வெண்டி டூ..?  ஆர் யூ ஷ்யூர்...?


"யெஸ்'


'வெய்ட்..  "  அவள் அவளது பாஸுடன் பேசினாள்.. 


'ஓ.கே நடேசன்.. தட்ஸ் அ டீல்... ' பாஸ் ஒத்துக் கொண்டு விட்டார்.


"நாளை காலை என் வீட்டிற்கு கொடுத்தனுப்பு.கொண்டு வருபவரிடெமே 
அந்த தொகை குறித்து அனுப்பப்புகிறேன்."


"தட்ஸ் நைஸ்.. கமான்... லெட்ஸ் செலபரேட் இட்."  புடவையை நழுவ விட்டாள்


"நோ. ஐ டோண்ட் வாண்ட் டு பி தட் சீப்...லெட்ஸ் ஸீ லேட்டர்."
 அவளைப் புறக்கணித்துவிட்டு புறப்பட்டார் நடேசன்.


"ஏன்? என்ன ஆச்சு திடீரென்று ? நான் வேண்டாமா?"


"வேண்டாம் ப்ரியா. ஒரு பாவம் போதும்"


சொல்லியபடி, அடுத்த நாள் பணமும், டெண்டரில் குறிப்பிடப்பட 
வேண்டிய தொகையும் கை மாறியது.


டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவரவர்கள் தங்கள் தினப்படி டியூட் டிகளுக்கு திரும்பினர்.  ப்ரியா அதன்பின் அவருடன் பேசவே இல்லை. அது 
அவருக்கு பெருத்த நிம்மதியைத் தந்தது.  


ஒரு மாதம் கழிந்திருக்கும். அது ஒரு புதன் கிழமை.  மாநில அரசின் செக்ர 
டேரியட்டில் 'டெண்டர்கள்' திறக்கப் பட்டன. டெண்டர் ஓபனிங்குக்கு எம்.டி யும், நடேசனும் போனார்கள்.  


'கே.டி.ஸ் கம்யூட்டர்ஸின்' சார்பாக ப்ரியாவும், அவள் பாஸும் வந்திருந்தனர். மொத்தம் நாலு கம்பனிகள்.  அனைவருக்கும் தெரியும், போட்டி "கே.டி.ஸ் கம்யூட்டர்' க்கும் 'Win and Win' கம்ப்யூட்டர்ஸுக்கும் தான் என. 


முதலில் 'Win and Win' கம்ப்யூட்டரின் கொட்டேஷன் பிரிக்கப்பட்டது.  பின் கோட் படிக்கப்பட்டது.  ரூ.29,200.


கண்களால் நன்றி சொன்னாள் ப்ரியா.   முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் நடேசன்.  அடுத்து "கே.டி.ஸ் கம்ப்யூட்டர்ஸி' கவர்.  


டெண்டர் ஓபனிங் ஆபீஸர் குறுக்கிட்டார். "வெய்ட்.. இந்த கொட்டேஷன் கவர்.. வேக்ஸ் சீல் கொண்டு, சீல் செய்யப் படவில்லை.  செல்லோ டேப் போட்டு ஒட்டியிருக்கிறது.. நமது டெண்டர் கண்டிஷன் படி 'கோட் கவர்' அரக்கில் கம்பெனி சீல் கொண்டு சீல் செய்யப் பட்டிருக்க வேண்டும். இந்த கவரை ஏற்றுக் கொள்ள முடியாது.."




"கே.டி.ஸ் கம்ப்யூட்டர்" எம்.டி குறுக்கிட்டார்.  இட்ஸ் ஆல் த ஸேம் சார்.. யாரும் பிரிக்க முடியாதபடி 'செல்லோ' போட்டிருக்கிறதே.. என்றார்.


"'நோ... நோ.. டெண்டர் கண்டிஷன் மிகவும் தெளிவாக உள்ளது.. இந்த கோட் கவர் வேக்ஸ் சீல் செய்யப்படவேண்டும்.. அப்படி இல்லை யென்றால் அந்த கோட் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்" டெண்டர் கண்டிஷனை படித்துக் காண்பித்தார் அதிகாரி.


விவாதங்கள் பலனில்லை.  உடனிருந்த விஜிலென்ஸ் ஆபீஸரும், இந்த டெண்டர் பிரிக்கக் கூடாதென அபிப்ராயம் கூறினார்.


டெண்டர் முடிந்து. 'Win and Win Computers' கம்யூட்டர் சப்ளை செய்ய தேர்ந் தெடுக்கப்பட்டது.  


"கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் நடேசன்.." கை குலுக்கினாள் ப்ரியா


"நத்திங் ராங் இன் மை பார்ட்" என்றார் நடேசன்.


"யெஸ், ஐ அக்ரீ... இட்ஸ் ஆல் இன் தெ கேம்." கண்களில் சோகத்தை மறைத்தாள் ப்ரியா.


"கே.டி.ஸ் கம்ப்யூட்டர்" -ன் அக்கவுண்டெண்ட் வேணுகோபால், வேக்ஸ் சீல் வைக்காததிற்காக வேலையை விட்டு நீக்கப் பட்டார்.  அவருக்கு வருத்தமேதும் இல்லை. அவ்வாறு செய்ததிற்காக, நடேசனிடம் அவர் வாங்கிய இரண்டு லட்சம் வீட்டில் பத்திரமாக இருந்தது.  'Win and Win Computers' -ன் சிஸ்டர் கம்பனி ஒன்றில் பிறகு வேலை போட்டுத்தருவதாக நடேசன் வாக்கு கொடுத்திருக்கிறாறே!!


-0-

No comments:

Post a Comment